ஜல்லிக்கட்டு சர்வதேச விளையாட்டாக அங்கீகாரம் பெற வேண்டும் என இலங்கை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டைமான் காளை கலந்து கொண்டு வெற்றி பெற்றது.
தொடர்ந்து செய்தியாளர் பேட்டி அளித்த அவர், திருச்சி மாவட்டம் பெரிய சூழல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் என்னுடைய காளை கலந்து கொண்டு வெற்றி பெற்றது. பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு என்பது உலக அளவில் புகழ் பெற்று உள்ளது. மதுரை அலங்காநல்லூர் போல பெரிய சூரியூரும் புகழ்பெற்றதாகும். அரசு சட்ட திட்டங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
undefined
நீலகிரியில் யானை பொங்கல் விழா கோலாகலம்; உறியடித்து மகிழ்ந்த ஆட்சியர் அருணா
ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மட்டுமே நடைபெற்று வருகிறது. அது உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தின் ஒன்டிராஜ் துணையுடன் இலங்கையில் கடல் கடந்து ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளோம். கடல் கடந்து செய்யும்போது அது சர்வதேச அங்கீகாரம் பெறும். இந்த ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தோடு இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளோம்.
டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான்
ஜல்லிக்கட்டு சர்வதேச விளையாட்டாக ஜல்லிக்கட்டு சங்கத்துடன் இணைந்து கொண்டு செல்ல உள்ளோம். இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் தாக்கம் ஏதும் பெரிதாக இல்லை. வரவேற்பு எதிர்பார்த்ததற்கு மேலாக இருந்தது என தெரிவித்தார்.