திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில், தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவரை போதை வாலிபர்கள் கடுமையாகத் தாக்கி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் பனையபுரத்தில் இன்று கரை ஒதுக்கியது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில், தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவரை போதை வாலிபர்கள் கடுமையாகத் தாக்கி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் பனையபுரத்தில் இன்று கரை ஒதுக்கியது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார். இவரது மகன் ஜீவித்குமார், திருச்சி அண்ணா பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஜீவித்துக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தப் பெண், திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ படித்து வருகிறார். காதலர்களான இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
undefined
கடந்த 30-ம் தேதி மாலை 3 மணியளவில், கொள்ளிடம் பழைய பாலம் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தனிமையில் இருந்த ஜீவித், இந்து ஜோடியை கோகுல், கலையரசன் ஆகியோர் மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வாலிபர்கள் 2 பேரும் போதையில் இருந்துள்ளனர். தனது காதலியிடம் அவர்கள் அத்துமீறுவதை பார்த்து ஆத்திரமடைந்த ஜீவித் முதலில் அவர்களிடம் கெஞ்சி உள்ளார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபடவே ஜீவித் 2 பேரையும் தடுத்து போராடி இந்துவை மீட்டுள்ளார். காதலியின் கற்பை காப்பாற்ற அவரை அங்கிருந்து ஓடிவிடு, இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்துவை அவர்கள் நெருங்காதபடி தடுத்து போராடினார்.
உடனே இந்து அங்கிருந்து தப்பி பாலத்தின் வழியாக சமயபுரம் ரோட்டு கரைக்கு வந்துள்ளார். அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த மற்றும் சலவைத் தொழிலாளர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறி ஜீவித்தை மீட்க வந்துள்ளார். ஆனால் ஜீவித் அங்கு இல்லை. கோகுல் மற்றும் கலையரசனுக்கு தர்மஅடி கொடுத்து, கேட்டபோது அவரை ஆற்றில் தூக்கிவீசிவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, கங்சா போதையில் இருந்த இருவரையும் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்தை தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் மாணவன் தேடப்பட்ட நிலையில், அவரின் பை மட்டும் சிக்கியது. இந்நிலையில் பனையபுரம் கொள்ளிடம் ஆற்றில் மாணவன் ஜீவித் உடல் சடலமாக மிதந்து வந்த போது தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.