திருச்சியை தட்டித் தூக்கிய திமுக..! ஊராட்சிப் பதவிகளை அள்ளியது..!

By Manikandan S R SFirst Published Jan 3, 2020, 4:05 PM IST
Highlights

திருச்சியில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 270 இடங்களில் வெற்றி வாய்ப்பில் இருக்கிறது. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 2336 இடங்களில் அக்கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்ச சார்பு நிலையையும் மீறி திமுக அமோக வெற்றி பெற்றிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி இருக்கிறது.

அந்தநல்லூர், மணிகண்டம், திருவெரும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி, தா.பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றி இருக்கிறது. லால்குடி மற்றும் துறையூர் ஒன்றியங்களில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. 24 மாவட்ட ஊராட்சி குழு பதவிகளில் திமுக 18 இடங்களையும் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்காரணமாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. 

ஒன்றிய தலைவர் பதவியில் 12 , மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் என அனைத்து இடங்களையும் கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் திருச்சி மாவட்ட திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

click me!