திருச்சி சோமரசம்பேட்டை அருகே நடைபெற்று வரும் மாநில அளவிலான கபடி போட்டியில் நகைச்சுவை நடிகர் கிங்காங் பங்கேற்று வீரர்களுடன் கபடி விளையாடி மகிழ்ந்தார்.
தமிழர்களின் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டியினை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில், பாரதியார் கபடி குழு சார்பில் 93வது ஆண்டாக மாநில அளவிலான ஆடவர் கபடி போட்டி திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள பெருங்குடி கிராமத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநில அளவிலான கபடி போட்டியில் 34 மாவட்டங்களில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. போட்டிக்கள் அனைத்தும் நாக் அவுட்டு முறையில் நடத்தப்பட்டு அதன் பின்னர், அரையிறுதி போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படுகின்றன.
undefined
தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் மற்றும் புரோ கபடி விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் இப்போட்டியில் ரூ.1 லட்சம் வரையிலான பரிசுத்தொகை மற்றும் மிகப்பெரிய அளவிலான சுழற் கோப்பை வழங்கப்பட உள்ளது. இது மட்டுமன்றி சிறந்த ரைடர், கேட்சர் மற்றும் சிறந்த வீரர்களுக்கு என தனித்தனியே டிவி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
நேற்றைய தினம் போட்டிகளை காமெடி நடிகர் கிங்காங் பங்கேற்று தொடங்கி வைத்ததுடன், கபடி போட்டிகளை ரசித்து மகிழ்ந்த கிங்காங் வீரர்களுடன் களத்தில் இறங்கி உற்சாகமாக கபடி விளையாடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய காமெடி நடிகர் கிங்காங், இதேபோன்று ஒவ்வொரு பகுதியிலும் கபடி போட்டியினை நடத்தினால் நம்முடைய கலாசாரம், பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும், மறக்க மாட்டார்கள். விளையாட்டு வீரர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் எனது சல்யூட் என்றார். மனதிலும், உடலிலும் தைரியம் இருந்தால் தான் கபடி விளையாட முடியும்.
கபடியை வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் திருடனாக,போலீஸாக, டிரைவராக நடித்துள்ளேன், ஒரு படத்திலாவது கபடி விளையாடுவது போல நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். போலீசாக, லாரி டிரைவராக படத்தில் வரும்போது கபடி விளையாடுவது போல வர முடியாதா... அப்படி நான் விளையாடினால் சுழன்றுடித்து 10 பேரை அவுட் செய்து விடுவேன் என மகிழ்ச்சி பொங்க பேசினார்.
உயரம் மட்டும் தான் சிறுசு; எங்களுக்கு தைரியம் ரொம்ப பெருசு: ஆட்சியரிடம் மனு அளித்த 3 வயது சிறுமி