தமிழகத்தில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19 வரை பொங்கல் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19 வரை பொங்கல் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி முதல் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை போன்ற வெளி நகரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்வார்கள். கல்விக்காக வெளியூரில் தங்கி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பொங்கலை ஒட்டி வரும் தொடர் விடுமுறையை ஊருக்கு சென்று உற்சாகமாக கழிப்பார்கள்.
இந்தநிலையில் பாலிடெக்னிக் மாணவர்கள் பொங்கலை கொண்டாட ஏதுவாக 9 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையுடன் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வார இறுதி நாட்கள் என்பதால் அதையும் சேர்த்து 19 தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் அனுப்பியுள்ளார்.
9 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பாலிடெக்னிக் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.