பல லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்திய பலே கில்லாடிகள்.. விமான நிலைய சோதனையில் பிடிபட்டனர்!!

By Asianet Tamil  |  First Published Sep 20, 2019, 5:00 PM IST

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.


உலகளவில் அனைத்து நாடுகளின் மொத்த வருவாயில், சுங்க வரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 1994க்கு முன், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வர இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் கடத்தல் தங்கம் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதையடுத்து, 1994 முதல், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டு சுங்கவரி விதிக்கப்பட்டது. வரி குறைவு என்ற காரணத்தால் மக்கள் மட்டுமின்றி வணிகர்கள் பலர் வெளிநாடுகளிலிருந்து அதிகளவு தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தங்கத்துக்கு விதிக்கப்படும் சுங்கவரி சில ஆண்டுகளுக்கு மீண்டும் உயர்த்தப்பட்டது. இதனால், கடத்தல் அதிகரித்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தங்கம் அதிகளவு பிடிபடுகிறது. இதன்காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று திருச்சி விமான நிலையத்தில் அரங்கேறியது. நேற்று இரவு துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த திருவாரூரைச் சேர்ந்த முகமது சுலைமான் என்பவர் தனது உடைமையில் சுமார் 186 கிராம் எடை கொண்ட கை செயின் மற்றும் வளையல்களை சட்டத்திற்கு புறம்பாக மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போன்று அதே விமானத்தில் திருச்சியை சேர்ந்த பஷீர் அகமது என்பவர் பயணம் செய்தார். அவரை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் அவரிடமிருந்து கலர் மாற்றம் செய்யப்பட்ட 1247 கிராம் எடை கொண்ட சுமார் 47 லட்சம் மதிப்புள்ள 22 தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். சட்டத்திற்கு புறம்பாக துபாயில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததால் விமான நிலைய காவலர்கள் அவரை கைது செய்தனர். மேலும் முகமது சுலைமானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கொண்டு வருவதற்காக செயல்படும் குழுவைச் சேர்ந்தவர்களா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!