சினிமாவை விஞ்சிய தரமான சம்பவம்.. .. காரில் கடத்தப்பட்ட சிறுமியை அதிரடியாக மீட்ட பொதுமக்கள்.. வாலிபர்களுக்கு தர்ம அடி!!

By Asianet Tamil  |  First Published Sep 19, 2019, 1:58 PM IST

திருச்சி அருகே தந்தையுடன் சென்ற சிறுமியை கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.


திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 17. கணபதியும் அவரது மகளும் மணப்பாறையில் இருக்கும் ஒரு குடிநீர் ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். தினமும் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஆலைக்கு சென்று வருவார்கள் என்று தெரிகிறது.

Tap to resize

Latest Videos

undefined

நேற்றும் வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர்கள் இரவு பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை கணபதி ஓட்டியிருக்கிறார். அப்போது அவர்களை காரில் ஒரு கும்பல் பின்தொடர்ந்து வந்திருக்கிறது.

இருசக்கர வாகனத்தில் சென்ற கணபதியை மறித்து முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்திருக்கின்றனர். அப்போது திடீரென பின்னால் அமர்ந்திருந்த ரேகாவை காருக்குள் இழுத்து கதவை மூடிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணபதி காரைத் தொற்றி கொண்டு கூச்சல் போட்டிருக்கிறார். கார் வேகமாக நகரத் தொடங்கியது.

இதை கவனித்த பொதுமக்கள் காரை மறித்து சிறுமியை மீட்டனர். காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் 3 பேரை பிடித்து  தர்ம அடி கொடுத்தனர். காரையும் அடித்து நொறுக்கினர்.

அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்படி காவல்துறையினர் விரைந்து வந்தனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 3 பேரையும் மீட்டு கைது செய்தனர். மேலும் எஞ்சியவர்களையும் உடனே கைது செய்ய கோரி திருச்சி- திண்டுக்கல் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானம் செய்த காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

click me!