திருச்சியில் லாரியை முந்தி செல்ல முயன்ற திருங்கைகள் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் தனியா(வயது 25), தமிழ்(29) ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை தஞ்சை மாவட்டம், பூதலூர் அயோத்திபட்டியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் திருநங்கைகள் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் தன்யா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு திருநங்கையான தமிழை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
undefined
பணம் வாங்கி ஏமாற்ற நினைத்த நபரை காரில் கடத்தி கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த தனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் விபத்து தொடர்பாக டிப்பர் லாரி டிரைவர் மணிமாறன் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D