10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை; தனது கல்வியால் வீட்டிற்கே வெளிச்சம் கொடுத்த அரசுப்பள்ளி மாணவி

By Velmurugan s  |  First Published May 18, 2024, 2:54 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் தனது வீட்டிற்கு மின்சார வசதியே இல்லாமல் கல்வி பயின்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 492 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்த மாணவியின் வீட்டிற்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கி தமிழக அரசு தனது ஊக்கத்தை தெரிவித்துள்ளது.


திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே பத்தூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலா, சுதா தம்பதியரின் மகள் துர்கா தேவி. இவர் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார். தொடர்ந்து பள்ளிக்கு திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் நேரில் சென்று மாணவியை வாழ்த்தினார்.  

நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை; விரைந்து செயல்பட்டு சிறுத்தையை பிடித்த வனத்துறை

Tap to resize

Latest Videos

undefined

அப்போது மாணவி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, தனது வீட்டில் மின்சாரம் இன்றி 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு  பக்கத்து வீட்டில் சார்ஜ் செய்து செல்போன் வெளிச்சத்திலும், மெழுகுவத்தி வெளிச்சத்திலும் படித்து வெற்றி பெற்றேன். மேலும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மூன்று கம்பம் நடுவதற்கு செலவு செய்ய முடியாத நிலையில்  தமிழக அரசு சார்பில் உதவி செய்து விரைவில் தனது வீட்டிற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மனைவியை தீர்த்து கட்ட ஸ்கெட்ச் போட்ட கணவன்; திடீரென குறுக்கே வந்த மாமனார் - தஞ்சையில் பரபரப்பு

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் உடனடியாக மாணவியின் இல்லத்திற்கு அரசு சார்பில் முன்பணம் செலுத்தப்பட்டு உடனடியாக புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. இதற்கு மாணவி துர்கா தேவி தனது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மின்சார வாரியத்திற்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் 12-ம் வகுப்பு மாநிலத்திலேயே முதலிடம் பெற்று மருத்துவர் ஆக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

click me!