
மன்னார்குடி அருகே சோழங்கநல்லூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் திருவிழாவையொட்ட்டி மின்விளக்கு பொருத்திய போது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காடுவங்குடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் ஹரிஷ்(வயது 17). இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த நிலையில் சோழங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் மின் விளக்கு கட்டுவதற்காக வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் ஹரீஷ் உயிரிழந்தார். இது அறியாத அவரது உறவினர்கள் பல மணி நேரம் பல இடங்களிலும் தேடி வந்தனர். இறுதியில், ஹரீஷ் வயல் வெளியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது. தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விக்கிர பாண்டியம் போலீசார், ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.