வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published May 3, 2023, 11:50 AM IST

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வாளியில் இருந்த தண்ணீரில் தலை குப்புற கவிழ்ந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட தென்குளவேலி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்கிற மனைவியும் 9 வயதில் ஒரு மகனும் இரண்டு வயதில் ஒரு மகனும் இருந்தனர். இந்த இரண்டு மகன்களும் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் முத்துகிருஷ்ணனின் இரண்டாவது மகன் 2 வயதான துருவன் என்பவர் பாத்திரத்தில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரில் விளையாடும் பழக்கம் உடையவனாக இருந்து வந்துள்ளான். இந்த நிலையில் நேற்று வீட்டின் பின் புறத்தில் அலுமினிய வாளியில் பாதி அளவு பிடித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென நிலைத் தடுமாறி சிறுவன் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்துள்ளான்.

உடன் பிறந்த தம்பியுடன் கள்ளத்தொடர்பு; மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண்

இதனை கவனிக்காமல் ரூபனின் தாய் கீதா சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கீதா சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த பொழுது துருவன் வாளிக்குள் தலை குப்புற விழுந்து கிடந்துள்ளான். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தினர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அழகி போட்டியில் பங்கேற்று மாடர்ன் உடையில் ஒய்யாரமாக நடந்துவந்த திருநங்கைகள்

இது தொடர்பாக வலங்கைமான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 வயது சிறுவன் வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!