கோவில் திருவிழாவை பார்த்த அசதியில் தண்டவாளத்தில் உறங்கிய 3 பேர் ரயிலில் அடிபட்டு பலி

By Velmurugan sFirst Published Apr 24, 2023, 3:26 PM IST
Highlights

திருவாரூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தேறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக நடைப்பெறும். அந்த வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. முக்கிய நாளான 10ம் நாள் நேற்றிரவு காவடி எடுத்தல், சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் விடிவிய நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துத் கொண்டனர்.

மதுபானங்களை வீடு வீடாக டோர் டெலிவரி செய்து விடுங்கள் - வானதி சீனிவாசன் காட்டம்

இந்தநிலையில் திருவிழாவை காணவந்த உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருள் முருகதாஸ் (வயது 17), கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் பரத் குமார் (17), நாகை மாவட்டம், தாணிக்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த முருகபாண்டியன்(24) ஆகிய 3 இளைஞர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டதால் சோர்வு ஏற்பட்டதுடன் அருகில் இருந்த ரயில்வே தண்டாவளத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். 

அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் செங்கோட்டை விரைவு ரயில் மோதியது. இதில் அருள் முருகதாஸ் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

ஆசை வார்த்தை கூறி மருத்துவரிடம் ரூ.34 லட்சம் ஏமாற்றிய அமெரிக்க பெண்? சைபர் கிரைம் போலீசார் வழக்கு

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரத் குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரத்குமார் உயிரிழந்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவின்போது ஒரே நாளில் மூன்று இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த  துயர சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!