வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா பயணிகள் சென்ற மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 நபர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தபினர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 13 நபர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மினி வேன் மூலமாக புறப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விக்கிரபாண்டியம் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் 10 அடி பள்ளத்தில் மினி வேன் முற்றிலுமாக கவிழ்ந்தது.
undefined
விபத்தை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை செய்ததில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு
மேலும் இந்த வேனில் பயணித்த நான்கு சிறுவர்கள் உட்பட 13 நபர்களும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மற்றொரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணிக்கு சென்றனர். இது தொடர்பாக விக்கிரபாண்டியம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடன் பிறந்த தம்பியுடன் கள்ளத்தொடர்பு; மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண்