கனமழை எதிரொலி... திருவாரூர், காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

By Narendran S  |  First Published Feb 2, 2023, 8:54 PM IST

மழை காரணமாக திருவாரூர் மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார். 


மழை காரணமாக திருவாரூர் மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார். முன்னதாக தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது, காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக‌ மாறியதால் ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மானாமதுரை, புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

Tap to resize

Latest Videos

undefined

வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முடியுபெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கிழக்கு திசையின் காற்றின் வேகம் காரணமாக கடந்த வாரம் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக‌ மாறி உள்ளது.

இதையும் படிங்க: ஓய்வு பெற்ற நல்லாசிரியருக்கு ஒன்றிணைந்து விழா நடத்திய கிராம மக்கள்

இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இன்று காலை முதல் திருவாரூரில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதை அடுத்து மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இதேபோல் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!