பள்ளி மாணவர்களிடையே இயற்கை விவசாயம், காய்கறி தோட்டம், விவசாயத்தின் அடிப்படை உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் விதமாக திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இயற்கை விவசாய முறையில் காய்கறித் தோட்டம் அமைத்தல் விவசாயத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்வது போன்றவற்றிற்காக இந்த பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்படுகிறது. மேலும் சத்துணவுக்கு தேவையான காய்கறிகள் இயற்கை முறையில் பயிர் செய்து அனுப்படும். மேலும் தொழிற்கல்வி உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதற்கு தகுந்தாற் போல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் கூறி இருக்கிறார்.
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்: தட்டி கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல்
undefined
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த திட்டம் கொண்டு வரப்படும். முதல் முறையாக கலைஞர் பிறந்த மாவட்டமான திருவாரூரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1540 பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 3030 பள்ளிகள் பழுதடைந்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 1747 வகுப்பறைகள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகளை வருகின்ற 27ம் தேதி கேளம்பாக்கத்தில் முதல்வர் தொடங்க இருக்கிறார். முதல் கட்டமாக 240 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதிகளில் எங்கு பள்ளிகளில் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் மாணவ, மாணவிகள் பயில்கிறார்களோ அந்த பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து அந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.
மக்கள் மனமாற்றத்தில் உள்ளனர்; இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான்: செங்கோட்டையன் நம்பிக்கை
கடந்த வருடத்தில் மட்டும் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மாணவ மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்தியுள்ளனர். அவர்களை திரும்ப பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோன்று எந்த மாணவன் பள்ளியில் இருந்து நின்று விடுவான் என்பதை நடவடிக்கை மூலம் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு வருடங்களில் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் மீண்டும் சேர்ந்துள்ளனர் என்றார்.