இந்நிலையில் கொரோனா தொற்றால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் தொடங்கப்பட்டது.
undefined
பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு பாதுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ் 2 மாணவிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 5 மாணவிகளும் விடுதியில் தங்கி படித்து வருவதால் பிற மாணவிகளுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவுகளின் படி மொத்தம் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதியை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.