19 வயது மகன் விபத்தில் உயிரிழப்பு.. பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு... 5 பேருக்கு மறுவாழ்வு..!

Published : Oct 14, 2020, 11:29 AM IST
19 வயது மகன் விபத்தில் உயிரிழப்பு.. பெற்றோர் எடுத்த  அதிரடி முடிவு... 5 பேருக்கு மறுவாழ்வு..!

சுருக்கம்

திருவாரூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்

திருவாரூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ராஜேந்திரன்- தமிழரசியின் மகன் குபேரன் (19). கடந்த மாதம் 30ம் தேதி  தாத்தாவுடன் மளிகை பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த குபேரன் ரத்த வௌத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, உடனே அவரை மீட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து குபேரனின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, குபேந்திரனின் இதயம், இரண்டு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் எடுக்கப்பட்டது. இதன்மூலம் 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையுடன் UPSC , TNPSC படிக்க இலவச பயிற்சி : தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு: 163 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…