அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். சத்துணவுகளை மையங்களில் தயார் செய்து குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று அளிக்கவும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.
undefined
தமிழகத்திலும் கொரோனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு(எல்.கே.ஜி முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரை) மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடுவதை பெற்றோர் தவிர்த்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அங்கன்வாடி மையங்களிலும் பயிலும் குழந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். சத்துணவுகளை மையங்களில் தயார் செய்து குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று அளிக்கவும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பபித்துள்ளார்.