
திருவாரூர் மாவட்டம் காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கொரடாச்சேரியைச் சேர்ந்த துரை என்பவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் ஒரு லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த நிலையில் மீதமுள்ள 50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் துரை 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிலம்பரசன் இன்று தனது குடும்பத்தினருடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென சிலம்பரசன் மட்டும் தான் மறைத்து வைத்திருந்த மன்ணென்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடி கைது
ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பொதுமக்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிலம்பரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று பொள்ளாச்சி, இன்று காங்கேயம்; போதை பெண்ணின் தொடர் ரகளையால் வாகன ஓட்டிகள் எரிச்சல்
கந்து வட்டி கொடுமையால் கடந்த 2017ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். 4 பேர் ஆட்சியர் அலுவலகத்திலேயே மரணித்த நிலையிலும் தற்போது வரை கந்துவட்டி கொடுமை மாறவில்லை என்று கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் கந்துவட்டி விவகாரத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.