சொகுசு காரில் சென்றவருக்கு தலை கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த காவல்துறை

By Velmurugan sFirst Published May 6, 2023, 11:33 AM IST
Highlights

திருவரூர் மாவட்டத்தில் சொகுசு காரில் சென்ற நபருக்கு தலைக்கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த காவல் அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட நபர் ரூ.1 லட்சம் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமையா நகரை சேர்ந்தவர் பத்மசுரேஷ். திருவாரூரில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். TN 50, AV 8773 என்ற பதிவு எண் கொண்ட சொகுசு கார் வைத்துள்ளார். நாள்தோறும் இந்த காரில் அவர் மன்னார்குடியில் இருந்து திருவாரூருக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி வழக்கறிஞர் பத்ம சுரேஷ் தலைகவசம் அணியாமல் வாகனம் ஒட்டியதாகவும் இதற்காக வழக்கறிஞர் பத்ம சுரேஷுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கு நன்னிலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி இவருக்கு தெரியவந்துள்ளத. எனவே தன்மீது பொய்யான வழக்கு பதிவு செய்ததால் ஏற்ப்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக தன் மீது வழக்கு பதிவு செய்த காவலர்  1 லட்ச ரூபாயை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவறும் பட்சத்தில் சம்பத்தப்பட்ட காவல் அதிகாரி மீது வழக்கு தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உணவில் மலத்தை அள்ளி வீசிய ஆதிக்க சாதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய குடும்பத்தினர்

இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி வழக்கறிஞர் பத்ம சுரேஷ். அவரது வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாகவும் அதற்கு அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்டம் ஆலிவலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  இவருக்கு தகவல் வந்துள்ளது. 

தனது வாகன பதிவு எண்ணை வேறு யாரேனும் பொருத்திகொண்டு இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் இயங்குகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என வழக்கறிஞர் பத்ம சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!