2 வருடம் பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் 'லிவிங் டுகெதராக' வாழ்ந்து வந்த தமிழக வாலிபர், இந்து முறைப்படி அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு சொக்கலிங்கம் புஷ்பலதா தம்பதியின் மகன் ரமேஷ் அரவிந்தர் (33) பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று அங்குள்ள ஏர்போட்டில் கடந்த 10வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.
அவர் தங்கியிருந்த இடத்தின் அருகே வேலை பார்த்த பிலிப்பைன்ஸ் நாட்டைத் தேர்ந்த ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ(32) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் அங்கேயே சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் கைக்குழந்தையுடன் ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோவையும் அரந்விந்தர் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.
அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள் வீட்டிலேயே எளிமையாக இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர், சட்டவிதிகள்படி இருவரும் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள முடிவு செய்து, முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இருவரும் தங்களது குழந்தையுடன் ரமேஷ் அரவிந்தரின் குடும்பத்துடன் வந்திருந்தனர். அங்கு தம்பதி இருவரும் கையெழுத்து போட்டு முறைபடி இருவரும் செய்துக்கொண்ட திருமணத்தை பதிவு செய்துக்கொண்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு கிருஸ்துவ பெண் தமிழக வாலிபரை கரம்பிடித்து இங்குவந்து இந்து காலாச்சாரம் படி திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.