திருவாரூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை

By Velmurugan s  |  First Published Sep 1, 2023, 12:52 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் நில அபகரிப்பு விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் மனோகரன் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கர்த்தநாத புரத்தைத் சேர்ந்த ரோஸ்லின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்து எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றதலைவி அமுதா, அதிமுகவைச் சேர்ந்த மன்னார்குடி ஒன்றிய பெருந் தலைவர்  மனோகரன் உள்ளிட்டோர் தான் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

நாகை அருகே மீனவ கிராமத்தில் மோதல்; திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி சாலை மறியல்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியும், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மானோகரன் வீட்டில் மத்திய குற்ற புலனாய்வுத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையில்  25க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீட்டில் சி பி சி ஐ டி விசாரணை நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!