தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் விவரம்;-
* தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமனம்
* ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமனம்.
* சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை செயலாளராக அருண்சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* அகதிகள் மறுவாழ்வு, தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலஇயக்குநராக ஜெசிந்தா லாசர்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.
* தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்
* திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம்
* நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.
* நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம்
* சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
* சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமனம்.
* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார்.