திருப்பூரில் மக்காச்சோளம் கதிர் அரவை இயந்திரத்தில் சிக்கி கை, கால்களை இழந்த வாலிபர் துடிதுடித்து பலி

By Velmurugan s  |  First Published Dec 22, 2023, 10:18 AM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே மக்காச்சோள கதிர் அரவை செய்யும் இயந்திரத்தில் சிக்கி அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள ஊத்தான்பட்டியைச் சேர்ந்தவர், பெருமாள். இவரது மகன் பேச்சிக்குட்டி(வயது 24). இவர் தனியாருக்‌கு சொந்தமான மக்காச்சோள கதிர் அருவடை செய்யும் டிராக்டருடன் கூடிய இயந்திர ஓட்டுனராக வேலை செய்து வந்‌தார். 

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள வேங்கிபாளையத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மக்காச்சோள கதிர் அரவை பணியில் ஈடுபட்‌டிருந்தார். அப்போது இயந்திரத்தில் மக்காச்சோளதட்டுகள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சிக்கிய தட்டையை ஓட்டுநர் பேச்சிக்குட்டி எடுக்க முயன்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

நீலகிரி வனப்பகுதியில் மானை துடிதுடிக்க வேட்டையாடிய புலி; வீடியோ வெளியாகி பரபரப்பு

இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் பேச்சுக்குட்டி அதனை எடுக்க முற்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக பேச்சிக்குட்டியின்‌ கை இயந்திரத்தில் சிக்கி அவரை உள்ளே இழுத்துவிட்டது. இதில் கை மற்றும் கால் இயந்திரத்தில் சிக்கி துண்டாகியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!