வெள்ளகோவில் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: அதிமுகவைச் சேர்ந்த தினேஷ் உள்பட 5 பேர் கைது

By SG Balan  |  First Published Mar 13, 2024, 12:06 AM IST

கடந்த 9ஆம் தேதி இரவு வீரக்குமார சாமி கோவில் தேரோட்ட கலை நிகழ்ச்சிகளை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பார்த்த போது கடத்தப்பட்டு 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.


வெள்ளகோவிலில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் தேர்த்திருவிழா பார்த்து கொண்டிருந்த 17 வயது சிறுமி 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 9ஆம் தேதி இரவு வீரக்குமார சாமி கோவில் தேரோட்ட கலை நிகழ்ச்சிகளை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பார்த்த போது கடத்தப்பட்டு 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடையதாக வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த பிரபாகர் (32), செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 2 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

பொன்னியின் செல்வன் கொடுத்த பூஸ்ட்! இயக்குநர் மணிரத்னம் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மூலனூர், தொட்டம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (27), வெள்ளகோவில், பாரதிநகரை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற சதீஸ் (28), வெள்ளகோவில், ஓரம்புபாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (26), வெள்ளகோவில், சுந்தராண்டிவலசை சேர்ந்த நந்தகுமார் (30), மூலனூர், தொட்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (30)  ஆகிய  ஐவரை கைது செய்துள்ளனர்.

மூலனூர் மாம்பாடி பகுதியைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியான தினேஷ் அதிமுகவின் தாராபுரம் பகுதி தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர். ஆட்டோ பைனான்ஸ் தொழில் செய்துவரும் இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

இவரது தந்தை கதிர்வேல் சாமி 25 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்துவருகிறார். தற்போது தொட்டம்பாளையத்தில் அதிமுக கிளைக் கழகச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவல்துறையினர் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு கொடுத்த ஆனந்த் மஹிந்திரா!

click me!