திருப்பூரில் மாஸ்க் அணியாத நபரிடம் சாதி பெயரை கேட்ட வீடியோ வைரல் ஆனாதையடுத்து காவலர் காசிராஜன் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் மாஸ்க் அணியாத நபரிடம் சாதி பெயரை கேட்ட வீடியோ வைரல் ஆனாதையடுத்து காவலர் காசிராஜன் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை மீறி வெளியில் செல்வோரிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் நடராஜன், ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காசிராஜா இருவரும் பெருமாநல்லூர் நான்குரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணியாமல் வந்த சிவக்குமார் என்பவரை தடுத்து முக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபாரதம் விதித்து காவலர் காசிராஜா அவரின் தகவல்களை சேகரித்த போது சாதி பெயரையும் கேட்டுள்ளார். சாலையில் வைத்து சாதி பெயரை கேட்டதால் ஆத்திரமடைந்த சிவக்குமார் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இந்த காட்சிகளை வீடியோவாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், வீடியோ வைரல் ஆனாதையடுத்து காவலர் காசிராஜன் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.