பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் திருப்பூருக்கு பெரும் பின்னடைவு - கமல்ஹாசன்

By Velmurugan s  |  First Published Apr 15, 2024, 12:52 PM IST

ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் திருப்பூரில் பனியன் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக கமலஹாசன் பிரசாரத்தின் போது பேசினார்.


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவருக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து நேற்று இரவு திருப்பூர் பாண்டியன் நகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, பரப்புரைக்கு நான் வந்ததற்கான காரணம் நாடு காக்கும் தருணம் என்பதால் வந்துள்ளேன். 

தனக்கான  தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய  உடை  தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை உயர்வு காரணம். தொழில் மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்?

Latest Videos

undefined

அண்ணாமலையுடன் ஒப்பிட்டு ஆட்டுக்குட்டியை அசிங்கப்படுத்த வேண்டாம் - தொண்டர்கள் மத்தியில் சினேகன் பேச்சு

அதிக வருவாய் ஈட்டு தரும் திருப்பூரை முறையாக கவனிக்க முடியவில்லை.  இதில் 75  புதிய நகரத்தை எப்படி பிரதமர் உருவாக்குவார். மக்கள் நலனே குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது. கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம்.  

அதிகமான பாலங்கள், சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பிக்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 தொகுதி. 6 தொகுதிக்கு  ஒரு கோடி கூட கிடையாது. அதற்கும் ஜி எஸ் டி போடுவது மத்திய அரசு. ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன். ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம்.

கச்சத்தீவு மீட்பு... ஒரு வார்த்தை கூட இடம்பெறாத பாஜக தேர்தல் அறிக்கை.. தமிழக கூட்டணி கட்சிகள் அதிருப்தி

ஜி.எஸ். டி வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக  திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி  கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது.

பங்களாதேசில் வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும் ஒன்றிய அரசு என்ன சொன்னாலும் இது மக்களுடன் ஒன்றாத அரசு. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன் என்று அவர் பேசினார்.

click me!