தமிழக அரசு கள்ளுக்கு மீதான தடையை நீக்க வேண்டும், தவறினால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் விவசாயிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்துவோம் என திருப்பூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உதவி ஆட்சியர் சௌமியா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர், காங்கேயம், மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறுகையில், காவிரி தீர்ப்பு ஒரு ஏட்டுச் சுரக்காய், கானல் நீர், மாயமான். கர்நாடகாவும் மதிப்பதில்லை, தமிழக அரசும் மதிப்பதில்லை. கொடிவேரி காளிங்கராயன் பகுதிகளுக்கு இரண்டாவது போகம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி தீர்ப்பில் அனைத்து பாசன பகுதிகளுக்கும் ஒருபோகத்திற்கான தண்ணீர் திறக்கப்பட்ட பின்பு தான் இரண்டாவது போகத்திற்கு விட வேண்டும் என இருந்தும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று தண்ணீர் திறக்கவில்லை.
அண்ணாமலைக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடி கம்பம் சரிந்து விபத்து; வேடிக்கை பார்த்த நபர் படுகாயம்
மாறாக பவானி ஆற்றின் கரைகளில் இருக்கக்கூடிய சாயப்பட்டறைகள், சாராயஆலைகள், காகித தொழிற்சாலைகள், தோல் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த வாய்க்காலில் தண்ணீர் போனால் தான் அவர்களது தொழில் நடக்கும். தண்ணீரை பயன்படுத்துவதற்கும், மாசுபட்ட தண்ணீரை விடுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். அவர்கள் பணத்தால் அடிக்கிறார்கள். கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விடுகிறார்கள். அதனால் நீர்வளத்துறை தண்ணீரை திறக்கின்றார்கள்.
தமிழகத்திற்கு அருகில் இருக்கக்கூடிய பாண்டிச்சேரி, கேரளா, தெலுங்கானா உட்பட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கள்ளுக்கு தடை கிடையாது. கலப்படத்தை கட்டுப்படுத்த முடியாது என்றால் தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசா? எதற்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும்? இறங்குங்கள்.
ஒரு மரத்து கல்லை தொடர்ந்து 48 நாட்கள் பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும் இது மருத்துவம். அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தமிழக அரசு கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கல்லை இறக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குற்றமாகும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசு கள் மீதான தடையை நீக்க வேண்டும். தவறினால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள். கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
8கோடி மக்கள் உள்ள இங்கு கள் ஒரு போதைப் பொருள், தடை செய்யப்பட வேண்டும் என நிரூபித்தாள் 10 கோடி ரூபாய் பரிசு என கள் இயக்கம் அறிவித்தது. யாரும் வரவில்லை. மக்கள் செம்மறி ஆடுகளாக இருக்கும்போது ஆட்சியாளர்கள் ஓநாயாக இருக்கின்றனர். மக்கள் பயப்படுகின்றனர். அனைவரும் ஒன்றிணைய வேண்டும், 18 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மக்கள் தற்பொழுது தான் உணர்ந்துள்ளனர் என்றார்.