பெற்ற மகளுக்கு 3 மாதமாக பாலியல் தொல்லை; தந்தைக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்றம்

Published : Jul 04, 2023, 01:27 PM IST
பெற்ற மகளுக்கு 3 மாதமாக பாலியல் தொல்லை; தந்தைக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்றம்

சுருக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் பெற்ற மகளுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில்  கடந்த 23.11.2022 அன்று சொந்த மகளையே மூன்று மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த மலையாண்டிசாமி என்பவரை  உடுமலை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவன்; கட்டையால் அடித்து கொன்ற மனைவி

விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பின்வரும் தீர்ப்பினை வழங்கியுள்ளார்:- "குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் மேலும் 10 வருட சிறை தண்டனை 7500 ரூபாய் அபராதமும், அபராத தொகையினை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

ஈரோட்டில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை; நண்பருடன் பேசியதை தந்தை கண்டித்ததால் விபரீதம்

குற்றவாளிக்கு குறுகிய காலத்தில் தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய உடுமலை அனைத்து மகளிர் காவல் துறையினரை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சிய சம்பவம்.. கத்தியுடன் காவலரை விரட்டிய வாலிபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!