மாட்டுக் கொட்டகை அமைப்பதில் ஊழல் செய்ததாக கூறி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து வந்து பாராட்ட விழா நடத்துவதாக கூறி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வரும் லட்சுமணன் மற்றும் கந்தசாமி ஆகிய இருவரும் மத்திய அரசு மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் அரசு நிர்ணயம் செய்த எடையை விட குறைவான எடையில் இரும்பு கம்பிகளை அமைத்தல், தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டுதல் மூலமாக ஊழல் செய்ததாக கூறப்படுகிறது.
undefined
ஊழலைத் தொடர்ந்து பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக மாடுகளை பிடித்து வந்து, மேளதாளங்களுடன் காய்கறிகள் அடங்கிய சீர்வரிசை தட்டை கொண்டுவந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடத்த முயற்சி செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏக்னாபுரத்தில் கிராம மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக 10 மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை
மேலும் விவசாயிகளுக்கு மத்திய அரசு திட்டத்தில் மாட்டுக் கொட்டகை அமைப்பதில் ஊழல் செய்த அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு விழா நடத்த முயற்சித்த விவசாயிகளை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து விவசாயிகள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் தங்கள் கண்டன கோஷங்களை எழுப்பி அங்கிருந்து கலைந்து சென்றனர்.