திருப்பூரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்த 7 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து 200 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அண்மை காலமாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அதிகாரிகள் அவ்வபோது சோதனை மேற்கொண்டு போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் கடந்த சில நாட்களாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப் படுவதாகவும், இதனை மருந்தகங்களே விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
கரும்பு விவசாயி சின்னத்தை கைப்பற்றிய கர்நாடகா கட்சி தமிழகத்தில் போட்டி; சிக்கலில் நாம் தமிழர் கட்சி
undefined
இதனைத் தொடர்ந்து திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் உள்ள மருந்தகங்களில் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனையின் போது கடலூரில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கடலூரில் இருந்து வாங்கி வந்து மருந்தகங்களில் விநியோகம் செய்த வேல்முருகன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போன்று மருந்தகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 120 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மொத்தமாக 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.