Illegal Relationship: உல்லாசத்திற்கு இடையூறு; 4 வயது குழந்தை அடித்து கொலை - தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்

By Velmurugan s  |  First Published May 30, 2024, 10:14 AM IST

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவனை அடித்து கொலை செய்த தாயின் கள்ளக் காதலனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பார்ததசாரதி. இவருடைய மனைவி சுபா(வயது 26). இவர்கள் இருவரும் கடந்த  4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். கணவன், மனைவி இருவரும் கடந்த 5  ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

திவ்யா தனது 4 வயது குழந்தையுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பார்த்தசாரதிக்கும், திவ்யாவுக்கும் இன்ஸ்டாகிராம்(சமூக வலைதளம்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகர் பகுதியில் கணவன், மனைவி எனக்கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

Courtallam: மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி பழைய குற்றாலத்தை நிரந்தரமாக மூட முடிவு? சுற்றுலா பயணிகள் வேதனை

பார்த்தசாரதி, திவ்யா இருவரும் தனிமையில் இருப்பதற்கு குழந்தை இடையூறாக இருந்ததால்  பார்த்தசாரதி திவ்யாவின் 4 வயது குழந்தையை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்தசாரதி குழந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் குழந்தை வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 4 வயது குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Modi visits TN : மோடியின் இன்றைய தமிழக பயண திட்டம் என்ன.? கோ பேக் மோடியை மீண்டும் ட்ரெண்ட் செய்யும் திமுக

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மங்கலம் காவல் துறையினர், பார்த்தசாரதி குழந்தையை அடித்ததால் தலையில் காயம் ஏற்பட்டதும், இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பார்த்தசாரதியை கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தையின் தாய் திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!