திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நண்பர்களுடன் விளையாடச் சென்ற 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள பண்ணைக்கிணரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மிதுன்ராஜ் (வயது 11) 6-ம் வகுப்பு படித்து வந்தான். இதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் வினோத் (12) 7-ம் வகுப்பு படித்து வந்தான். மிதுன்ராஜும், வினோத்தும் தங்களது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஊருக்கு அருகில் உள்ள காலி இடத்தில் விளையாடச் சென்றுள்ளனர்.
undefined
அவர்களில் மிதுன்ராஜ், வினோத்தை தவிர மற்ற 4 பேர் வீடு திரும்பி விட்டனர். மாயமான 2 சிறுவர்கள் குறித்து தகவல் தெரியாத நிலையில் சிறுவர்களின் பெற்றோர், நண்பர்கள், கிராம மக்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்று தீவிரமாக தேடிவந்தனர்.
இது குறித்து சிறுவர்களின் பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே பன்னைகினறு பகுதியில் உள்ள குட்டையில் சிறுவர்கள் இருவரும் சடலமாக மிதப்பதாக வந்த தகவலையடைத்து தீயனைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டு அவர்களின் உதவியுடன் உடல்கள் மீட்கப்பட்டன. முதல்கட்ட விசாரனையில் நன்பர்களுடன் விளையாட சென்ற சிறுவர்கள் குட்டையில் இறங்கி குளிக்க முற்பட்டபோது நீரில் மூழ்கி இறந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.