சீசன் முடிந்த நிலையிலும் தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் இருக்கும் குற்றாலத்தில் சீசன் நேரங்களில் தண்ணீர் அதிகாகமாக விழும். ஜூன் மாதத்தில் தொடங்கும் சீசன் ஆகஸ்ட் வரை நீடிக்கும்.
undefined
இந்த நிலையில் இந்த வருடம் தொடக்கத்தில் சீசன் நன்றாக இல்லாமல் இருந்தது. இடையிடையே அவ்வப்போது மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எப்போதும் போல அதிகமாக காணப்பட்டது.
தற்போது சீசன் முடிந்த நிலையிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அனைத்து அருவிகளிலும் மிதமான முறையில் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.