திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் புதுப்பேட்டையை அடுத்த செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கொம்பன். இவரது மகன் சுடலைமுத்து (வயது 30). தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பேட்டையில் செயல்பட்டு வந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.
பொதுவாக கல்லூரியை சுற்றுயுள்ள மக்கள் அதிகாலை முதலே கல்லூரி வளாகத்தில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி இன்று காலை கல்லூரி வளாகத்தில் பயிற்சி மேற்கொண்டவர்கள் மரத்தில் இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டை காவல் நிலையத்திற்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் திருட்டு; சாவகாசமாக மது அருந்திவிட்டு கைவரிசை
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடனடியாக உடலை கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞர் அதே பகுதியில் வசித்து வரும் சுடலைமுத்து என்பதும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிப்பதற்காக ஏரிக்கு சென்ற கூலி தொழிலாளி மற்றும் மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி
தற்கொலை செய்துகொண்ட இளைஞர் அதே கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.