சாத்தான்குளம் விவகாரம்... 11 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு அதிரடி தடை..!

By vinoth kumarFirst Published Jul 5, 2020, 11:07 AM IST
Highlights

சாத்தான்குளத்தை விவகாரத்தை தொடர்ந்து விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம்  உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு  அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தை விவகாரத்தை தொடர்ந்து விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம்  உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் முதன் முதலாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் ஒவ்வொரு காவல் நிலையத்தின் பகுதிகளிலுள்ள கிராமப்புறங்களிலிருந்து இளைஞர்களைத் தேர்வு செய்து போலீஸ் நண்பர்கள் குழு என்று உருவாக்கப்பட்டது. இதே போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்று குழு உருவாக்கப்பட்டது.

இந்த குழுவினர் காவல்துறையுடன் இணைந்து திருவிழாக்கள் பொதுக்கூட்டங்கள் மாநாடுகள் போக்குவரத்து நெரிசல் இதுபோன்ற பணிகளில் அவர்களைப் பயன்படுத்தி வந்தனர். மேலும் இவர்கள் கிராமப்புறங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களை சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக காரணமான தகவல்களை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்தனர்.

ஆனால், காலப்போக்கில் இவர்கள் காவல்துறை உடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு தவறான செயல்களுக்கு துணை போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் உயிரிழந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் நடந்த அன்று  சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஜஜி சங்கர் தெரிவித்தார்.

இந்நிலையில், திருச்சி, அரியலூர், விழுப்புரம், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு உதவி தேவைப்பட்டால் முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் இவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

click me!