தன்னால் மற்றவர்களுக்கு கொரோனா பரவி விட்டதோ என்ற மன உளைச்சலில் புகழ்பெற்ற நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்னால் மற்றவர்களுக்கு கொரோனா பரவி விட்டதோ என்ற மன உளைச்சலில் புகழ்பெற்ற நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண சிங், அவரது மகன் பிஜிலி சிங் உடன் இணைந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கீழரத வீதியில் அல்வா கடையைத் தொடங்கினார். தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி ஜமீன்தாருக்கு உணவு சமைக்க வந்தபோது அல்வா செய்து கொடுத்துள்ளனர். அல்வாவின் ருசியில் மயங்கிய ஜமீன்தார் நெல்லையில் தங்கி கடை தொடங்கச் சொன்ன நிலையில் அல்வா கடை தொடங்கப்பட்டது. கிருஷ்ணசிங், பிஜிலி சிங் உயிரிழந்த நிலையில் அவர்களின் உறவினரான ஹரிசிங் கடந்த 40 ஆண்டுகளாக கடையை நடத்தி வருகிறார். தற்போது வரை கடைக்கு பெயர் பலகை கிடையாது; கூடுதலாக 4 குண்டு பல்புகள் மட்டுமே போடப்பட்டிருக்கும்.
undefined
இந்நிலையில் இந்தக் கடையின் உரிமையாளர் ஹரிசிங்கின் மருமகனுக்கு அண்மையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஹரிசிங்குக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கட்ந்த 23-ம் தேதி ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவரும் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை ஹரிசிங்குக்கும் கொரோனா உறுதியானது.
இந்நிலையில், நேற்று மருத்துவமனை அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தொற்று பரவலுக்குக் காரணமாகிவிட்டோம் என்ற மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இவரின் உயிரிழப்பு நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.