கொரோனா பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் எதிரே 1900ம் ஆண்டு கிருஷ்ணசிங் என்பவர் லாலாகடை தொடங்கினார். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை "40 வாட்ஸ்' பல்பு மட்டும் எரிந்துகொண்டிருக்கும். இதனால் அக்கடைக்கு "இருட்டுக்கடை'அல்வா என பெயர் வந்தது. இந்த கடையில் இருந்து தயாரிக்கப்படும் "அல்வா' திருநெல்வேலிக்கு பெயர் பெற்றுத்தந்தது. மேலும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இக்கடையில் தயார் செய்யப்படும் அல்வா கொண்டு செல்லப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது.
இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த கொடூர கொரோனாவுக்கு இதுவரை முக்கிய பிரமுகர்களான திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன், விஜயா தனியார் மருத்துவமனை இயக்குநர் சரத்ரெட்டி, டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.