நெல்லை கல்லூரியை சேர்ந்த சுமார் 20 மாணவ, மாணவிகள் உயர்கல்வி ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில், கருத்தரங்கில் கலந்து கொண்டு மீண்டும் அவர்கள் அரசு பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடும் அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் குடிபோதையில் இருந்த ஒரு இளைஞர் உரசியப்படி சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
நெல்லையில் ஓடும் அரசு பேருந்தில் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை கல்லூரியை சேர்ந்த சுமார் 20 மாணவ, மாணவிகள் உயர்கல்வி ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில், கருத்தரங்கில் கலந்து கொண்டு மீண்டும் அவர்கள் அரசு பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடும் அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் குடிபோதையில் இருந்த ஒரு இளைஞர் உரசியப்படி சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அந்த இளைஞரை அடித்து உதைத்தனர். பின்னர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் பேருந்து நிலையத்தில் அந்த பேருந்தை எதிர்நோக்கி தயார் நிலையில் காத்திருந்தனர். மாணவிகள் வந்த பேருந்து புதிய பேருந்து நிலையம் வந்ததும் போலீசார் விரைந்து சென்று அந்த போதை இளைஞரை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து, காவல் நிலையத்தில் வைத்து இளைஞரிடம் விசாரணை நடத்திய பின் எச்சரித்து அனுப்பினர்.