6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்... எங்கெங்கே வரப்போகுது தெரியுமா..?

By vinoth kumar  |  First Published Apr 17, 2020, 10:11 AM IST

சித்திரை மாதம் வெயில் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு, வெப்பநிலை குறைந்து வருகிறது. சேலம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 


வெப்பச்சலனம் காரணமாக  தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சித்திரை மாதம் வெயில் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு, வெப்பநிலை குறைந்து வருகிறது. சேலம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும், காற்றின் ஈரப்பதம் குறைந்து, அதிகரித்த புழுக்கம், மாலை வரை நீடித்து வருகிறது. இந்நிலையில், மக்களை மகிழ்விக்கும் வகையில் வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Latest Videos

undefined

அதில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும். 

சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

click me!