தென்மாவட்டங்களில் திடீர் மழை..! வெப்பம் தணிந்ததால் மக்கள் உற்சாகம்..!

By Manikandan S R S  |  First Published Apr 5, 2020, 3:09 PM IST

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல இடங்களில் நேற்றிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் இடியுடன் தொடங்கிய மழை அதிகாலை நேரத்தில் வெளுத்து வாங்கியது.


கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தியிருக்கிறது. தற்போது வெயிலும் மிக கடுமையாக சுட்டெரித்து வருவதால் வெப்பம் அதிகமாகி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Latest Videos

undefined

இந்தநிலையில் திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர்,கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல இடங்களில் நேற்றிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் இடியுடன் தொடங்கிய மழை அதிகாலை நேரத்தில் வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. இன்று காலையில் இருந்து தென்மாவட்டங்களில் வெயில் தென்படாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று நள்ளிரவில் தொடங்கிய மழை அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகிறது. வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகி இருப்பதால் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்கள் உற்சாகமடைந்தனர். ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கில் முடங்கி இருந்த போதும் விவசாய பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் தற்போதைய மழையால் தென்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!