திமுக எம்.எல்.ஏ மகன் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!

By Manikandan S R S  |  First Published May 15, 2020, 9:08 AM IST

உடல் நிலை மேலும் நலிவுற்று சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காஜா பீர் முகமது அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலையில் அவர் மரணமடைந்துள்ளார். 


திமுக முன்னணி நிர்வாகிகளுள் ஒருவர் டி.பி.எம்.மைதீன்கான். முன்னாள் அமைச்சரான இவர் கடந்த 2001ம் ஆண்டு முதல் பாளயங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு காஜா பீர் முகமது(55) என்கிற மகன் இருந்துள்ளார். அவருக்கு அண்மைகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே உடல் நிலை மேலும் நலிவுற்று சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காஜா பீர் முகமது அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலையில் அவர் மரணமடைந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

அதைக்கேட்டு எம்.எல்.ஏ மைதீன்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஜா பீர் முகமதுவும் உயிரிழந்திருப்பதால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய பரிசோதனைகள் நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதனிடையே எம்.எல்.ஏ மகனின் திடீர் மரணம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எம்.எல்.ஏ மைதீன்கானுக்கு திமுக முன்னணியினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

click me!