நெல்லையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்து வந்தனர். ஏற்கனவே வடிவுக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 4-வது முறையாக கருவுற்று ஐந்து மாதம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் –மனைவி இருவரும் கடும் மனவேதனையில் இருந்துள்ளனர் .
மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகும் மனம் ஆறவில்லை. குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இருவரும் நேற்று இரவு இருவரும் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் இந்நிலையில் காலையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்த போது இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.