நற்செய்தி..! கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பிய நெல்லை வாலிபர்..!

By Manikandan S R S  |  First Published Apr 9, 2020, 8:15 AM IST

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்ட அவர் தற்போது பூரண குணமடைந்து  வீடு திரும்பியிருக்கிறார்.


உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 5274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 149 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து 738 பேர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்னர்.

Tap to resize

Latest Videos

undefined

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சளி, காய்ச்சல், இருமலுக்கு சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்றுள்ளனர். 
இந்தநிலையில் திருநெல்வேலி மருத்துவமனையில் துபாயில் இருந்து திரும்பிய ராதாபுரம் இளைஞர் ஒருவர் முதன்முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்ட அவர் தற்போது பூரண குணமடைந்து  வீடு திரும்பியிருக்கிறார். அவர் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி திருநெல்வேலி மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் தனிமை வார்டில் சிகிச்சை பெற்ற வந்த 5 வயது சிறுவன் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார்கள்.

click me!