நெல்லை படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயரின் பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயரின் பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மேலும், உமாமகேஸ்வரி அணிந்திருந்த செயின், வளையல்கள், பீரோவிலிருந்த சில நகைகள் என சுமார் 20 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் நெல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னரே கணவர் உயிரிழந்துவிட்டார். தனது மூன்று பெண் குழந்தைகளை வளர்ப்பதற்காக வீட்டு வேலைக்குச் சென்று வந்தார். மாரியம்மாள் குடும்பத்தினருக்கும், அவரின் 3 பெண் குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் அரசு உதவ வேண்டுமென்று அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.