சந்தானத்திற்கு அதிகமான கடன் இருந்துள்ளது. வியாபாரமும் சரியாக செல்லாததால் கடனை ஒழுங்காக செலுத்த முடியாத சூழல் இருந்துள்ளது. இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.இந்தநிலையில் மன உளைச்சலில் இருந்த சந்தானம் மனைவி மற்றும் மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே இருக்கும் கீழாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம்(52). மிட்டாய் வியாபாரம் பார்த்து வரும் இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கடைகளுக்கு மிட்டாய் விநியோகித்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஆரோக்கிய ஸ்ரீதர் என்கிற மகனும் ஜோதி என்கிற மகளும் உள்ளனர். லட்சுமி அங்கிருக்கும் அரசு உதவி பேரும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஸ்ரீதர் படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். ஜோதி கல்லூரியில் படித்து வருகிறார். சந்தானத்திற்கு அதிகமான கடன் இருந்துள்ளது. வியாபாரமும் சரியாக செல்லாததால் கடனை ஒழுங்காக செலுத்த முடியாத சூழல் இருந்துள்ளது. இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.இந்தநிலையில் மன உளைச்சலில் இருந்த சந்தானம் மனைவி மற்றும் மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த பொங்கலன்று இரவு மூவரும் விஷம் அருந்தி மயங்கி கிடந்தனர்.
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜோதி, அக்கபக்கத்தினர் உதவியுடன் மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்த சந்தானமும் ஜோதியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆரோக்கிய ஸ்ரீதர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரும் உயிரிழந்தார். மூன்று பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Also Read: முட்டி மோதிய ஜல்லிக்கட்டு காளை..! மாடு உரிமையாளர் குடல் சரிந்து பலி..!