தமிழகம் மற்றும் கேரள எல்லையையொட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 20, 21-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில்;- தமிழகம் மற்றும் கேரள எல்லையையொட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யுமா? அல்லது வட தமிழகம் வரை மழை இருக்குமா? என்பது 2 நாட்களில் தெரியவரும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் திருத்தணியில் 30 மி.மீ, அணைக்காரன்சத்திரம், வேதாரண்யத்தில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.