கொட்டித் தீர்த்த கனமழை .. குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு !!

By Asianet Tamil  |  First Published Aug 23, 2019, 11:10 AM IST

மேற்கு தொடர்ச்சி மலைகளில் நேற்றைய தினம் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது . இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை தடை விதித்திருந்தது .


நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் மாதத்தில் சீசன் தொடங்கும் . இந்த வருடம் ஜூன் 10 ம் தேதி தொடங்கிய சீசன் இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது . அதன் பிறகு மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப் பட்டது .

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது . நேற்று காலையில் இருந்தே குற்றாலத்தில் சீசன் நன்றாக இருந்தது . மதியம் 2 மணியளவில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது .

நேரம் செல்ல செல்ல நீர்வரத்து அதிகரித்து கொண்டே சென்றது . மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது . தண்ணீர் பழுப்பு நிறத்தில் இருந்ததால் அந்த பகுதியை தெரியாத அளவுக்கு இருந்தது . இதில் குளிப்பது ஆபத்து என்பதால் நேற்று முழுவதும் அனைத்து அருவிகளில் குளிப்பதற்கும் தடை விதிக்கப் பட்டிருந்தது .

ஆர்ப்பரித்து விழும் தண்ணீரின் அழகை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் கூடினர் . இந்த ஆண்டின் உட்சபட்ச வெள்ளமாக இது இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறினர் . அருவிகளில் நீர்வரத்து குறைந்த நிலையில் இன்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப் பட்டனர் .
 

click me!