நெல்லையில் சினிமா புகைப்பட கலைஞர் வீட்டில் இருந்து ஐந்து பழங்கால சிலைகளை நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் சினிமா புகைப்பட கலைஞர் வீட்டில் இருந்து ஐந்து பழங்கால சிலைகளை நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து காவல்துறை இயக்குனர் ஜெயந்த்முரளி, சோதனை நடத்தி கண்டறிய காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லை சரக சிலை தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீசார் ராஜவல்லிபுரம் சென்று அப்பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஒருநாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை... துரித நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்!!
அதில், அங்கு 24 சென்டி மீட்டர் உயரம் உள்ள உலோக விநாயகர் சிலை , 43.5 சென்டி மீட்டர் உயரம் உள்ள சுவரில் மாட்டும் உலோக விநாயகர் சிலை, சிலுவையில் அறையப்பட்ட 9.5 சென்டி மீட்டர் அளவுள்ள இயேசுநாதர் சிலை, வடமாநிலத்தில் வழிபடக்கூடிய 8 சென்டி மீட்டர் உயரம் கொண்ட தாரா அம்மன் உலோக சிலை ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலைகள் அனைத்திற்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை திருட்டு சிலைகளாக இருக்கக்கூடும் என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இதுக்குறித்த விசாரணையின் போது நடராஜன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: வாளால் கேக் வெட்டிய பிரபல ரவுடி.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ !!
அடுத்து சிலை தடுப்பு போலீசார் கைப்பற்றப்பட்ட 5 சிலைகளையும் டெல்லியில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி இது எந்த காலத்தை சேர்ந்த சிலைகள், இதன் மதிப்பு என்ன என்பது குறித்து அறிய முடிவு செய்தனர். தொடர் விசாரணையில் நடராஜன் சினிமாத்துறையில் புகைப்பட கலைஞராகவும், நடிகராகவும் உள்ளார் என்பதும், அழகு கலைப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.