சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடியவருக்கு உதவாமல் சட்டை பையை துழாவிய ஆசாமி; தென்காசியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jun 28, 2024, 10:46 AM IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபருக்கு உதவி செய்யாமல் அவரது சட்டை பையில் பணம், செல்போன் உள்ளதா என நபர் ஒருவர் துழாவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி  மாவட்டம்,  கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 47). இரண்டு தினங்களுக்கு முன்னர் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அட்டைகுளம் பகுதியில் இரவு நேரம் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயமடைந்து சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனர் உயிரிருக்கு போராடி கொண்டிருந்த நபரை காப்பாற்றாமல் ஆட்டோவில் இருந்து இறங்கி காயமடைந்த நபரின் சட்டை பாக்கெட்டில் இருந்த பொருளை எடுத்துகொண்ட பின்னர் ஆட்டோவை எடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். அதே போன்று அவ்வழியாக   சாலையில் நடந்த வந்த நபர் அவரை காப்பாற்ற மனமில்லாமல் அவரின் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு எதையே எடுத்து விட்டு அங்கிருந்து செல்வதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

Tap to resize

Latest Videos

Crime: காதலிச்சி கர்ப்பமாக்க தெரியும், கல்யாணம் பண்ண முடியதா? ராணுவ வீரரை பொளந்து கட்டிய உறவினர்கள்

அதே போன்று அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஒருவர் கூட காயமடைந்தவரை காப்பாற்ற மனமில்லாமல் செல்வது மனித நேயம் மறுத்து போனதா என்ற கேள்வியை ஏற்படுத்திய நிலையில் இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தகவல் அறிந்து சென்ற கடையநல்லூர் காவல் துறையினர் உயிரிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்ததாக  தெரிவித்தனர். அதன் பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க, குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில் நல்லடக்கம் செய்ய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tamilisai : பாஜகவில் உட்கட்சி மோதலுக்கு முடிவு!!மீண்டும் ஆளுநர் ஆகிறாரா தமிழிசை? அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு

தொடர்ந்து அவரின் உடலுக்கு  அரசு சார்பில் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா மலர் வளையம் வைத்து அஞ்சலி அலுத்தினார். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கடையநல்லூர் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய மேலக்கடையநல்லூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கந்தன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!